எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் வீசப்பட்ட கனைகள்

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் அந்த மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில், எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட மாநாடு இன்று நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மம்தா பானர்ஜி தலைமையில் தொடங்கியது.

கூட்டத்தில் ஸ்டாலின், தேவேகவுடா, குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, அரவிந்த கெஜ்ரிவால் (டெல்லி முதல்வர்), மல்லிகார்ஜூன கார்கே (காங்கிரஸ்) முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி ஆகியோரும் கலந்து கொண்னர். ஹிர்த்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி , சத்ருகன் சின்கா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசும் போது, இன்று நாட்டின் ஒரு வரலாற்று நாளாகும். அமித்ஷா-மோடி இருவரும் நாட்டை அழிக்கிறார்கள் என கூறினார். ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பேசும் போது, நமது ஒரே நோக்கம் இந்தியாவை காப்பாற்றுவது, ஜனநாயகத்தை கப்பாற்றுவது ஆகும் என்றார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசும் போது, மத்திய பாஜக அரசு நாட்டு மக்களை ஏமாற்றி விட்டது. மக்களிடையே பாஜக விஷத்தை தூவி வருகிறது. மோடிக்கு பதிலாக நாட்டுக்கு ஒரு புதிய பிரதமர் கிடைப்பார். எங்கள் கூட்டணியில் யார் பிரதமர் என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்வர்கள் என கூறினார்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசும்போது, பிராந்தியத்தில் மக்கள் மற்றும் அவர்களின் மாநிலங்களின் நலன்களை பாதுகாக்க வலுவான உள்ளுணர்வு வேண்டும் என கூறினார். முன்னாள் பிரதமர் தேவகவுடா வேற்றுமைகளை மறந்து செயல்பட எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.மாநில கட்சிகளின் தலைவர்கள் மக்கள் செல்வாக்கு பெற்றவர்களாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா கூட்டத்தில் பேசிய போது மோடி ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது பிரதமர் மோடி ஆட்சியில் ஜனநாயகம் இல்லை ஒன்றுபட்ட இந்தியாவுக்கு உதாரணம் தான் கொல்கத்தா பொதுக்கூட்டம் என்று அவர் பெருமிதம் கொண்டார்.