எதற்காக உடை மறந்து விட்டீர்களா…! ரசிகர்கள் கோபம்

பாலிவுட் நடிகை  சாரா கான் தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதை தொடர்ந்து  அவரை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

சாரா கான் வெளியிட்டுள்ள கவர்ச்சிப் புகைப்படம் ஒன்றை பார்த்து அவரின் ரசிகர்களே கோபம் அடைந்துள்ளனர்.  உங்களுக்கு என்ன ஆனது? எதற்காக உடை அணிகிறோம் என்பதை மறந்து விட்டு கண்டபடி உடை அணிகிறீர்களே. தயவு செய்து இது போன்ற புகைப்படங்களை வெளியிடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஏதாவது சர்ச்சையை கிளப்பினால் தான் அடுத்தவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்று நம்புகிறார் சாரா கான். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் விளம்பரத்தில் நடித்து பலரிடமும் திட்டு வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.