எண்ணெய் விளம்பரத்தை என்னங்க செய்யலாம்… ராஜா கேள்வி

எண்ணெய் விளம்பரத்தில் ராமர் மற்றும் சீதையை பயன்படுத்தியிருப்பதற்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக எச். ராஜா போட்டுள்ள டிவீட்: சன்லேண்ட் எண்ணெய் விளம்பரத்தில் இந்திரனையும் நாரதரையும் வைத்து நக்கல் செய்து விளம்பரம் செய்தனர்.

தற்போது எம்பெருமான் ராமனையும் சீதா பிராட்டியாரையும் விளம்பரத்திற்கு பயன்படுத்த துவங்கியுள்ளனர்.  இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. என்ன நடவடிக்கை எடுக்கலாம்? என்று எச் ராஜா தனது டிவீட்டில் கூறியுள்ளார்.

வழக்கம் போல இந்த டிவீட்டுக்கும் ஆதரவு, எதிர்ப்பு டிவீட்டுகள் குவிந்து வருகின்றன. இது போல கடவுள் படங்களை விமர்சித்தும், இழிவுபடுத்தியும் விளம்பரங்கள் வருவது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.