உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை : அனைத்து தொகுதியிலும் ராஜபக்சேவின் கூட்டணி முன்னிலை.

இலங்கையில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்றார். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்தார்.

அதிபர் தேர்தலில் ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்து சிறினோ போட்டியிட்டார். அக்கூட்டணி பாராளுமன்ற தேர்தலிலும் நீடித்தது.

இந்த நிலையில் மைத்ரி பால சிறிசேனா அதிபராக பதவி ஏற்ற பின்இலங்கையில் முதன் முறையாக 24 நகராட்சி கவுன்சில், 41 நகரமைப்பு கவுன்சில் மற்றும் 275 கிராம சபைகளுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது

இதன் மூலம் மொத்தம் 8,375 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இலங்கை உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை : அனைத்து தொகுதியிலும் ராஜபக்சேவின் கூட்டணி முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.