உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம்ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் இன்று அதிகாலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம்ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் இன்று அதிகாலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜ சுவாமி என அழைக்கப்படும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த விகாரி ஆண்டு வைகாசி மாதம் பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

கொடியேற்ற உற்சவத்தை யொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்தருகே எழுந்தருளினார். பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க அதிர்வேட்டுகள் வெடிக்க கோலாகலமாக கருடாழ்வார் பொறித்த கொடி, கொடிமரத்தில் ஏற்றிவைத்து பிரம்மோற்சவம் துவக்கி வைக்கப்பட்டது.

பின்னர் வரதராஜ பெருமாள் தங்க சப்பர வாகனத்தில் முன்னும் பின்னும் வேத மந்திரங்கள் ஒலிக்க திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் இத்திருவிழாவில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் சிம்ம வாகனம்,சேஷ வாகனம்,கருட வாகனம்,அனுமந்தவாகனம்,சூரியபிரபை,சந்திர பிரபை யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு விதமான வாகனங்களில் எழுந்தருளி காலை,மாலை இருவேளைகளிலும் காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.

மேலும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை வரும் 19ம் தேதி ஞாயிற்றுக் கிழமையும் திருத்தேர் திருவிழா வரும் 23ஆம் தேதி வியாழக்கிழமையும் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

கொடியேற்ற உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.

வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தை காண தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்திலிருந்தும் கோடைக்கால விடுமுறை என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து
கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.