உதகையில் புகைப்படக் கண்காட்சி

நூற்றாண்டு விழாவையொட்டி உதகையில் புகைப்படக் கண்காட்சி உதகையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

உதகையில் வரும் 30-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. விழாவையொட்டி எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.