உண்ணாவிரத போராட்டத்தில் உணவு செலவு மட்டும் ரூ. 60 லட்சமாம்.

ஆந்திர பவனில் சந்திரபாபு நாயுடு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். இந்த நீண்ட உண்ணாவிரத போராட்டத்தில் 26 ஆந்திர அமைச்சர்கள், 127 ஆந்திர எம்எல்ஏக்கள், 41 ஆந்திர மேலவை உறுப்பினர்கள், 150 பொதுக் குழு உறுப்பினர்கள், 2000 ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களுக்காக டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் அறைகள் ஒதுக்கப்பட்டது. ஆதரவாளர்களை ஆந்திரத்திலிருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்டது,  தங்குமிடம், உணவு உள்ளிட்ட செலவு மட்டும் ரூ. 60 லட்சமாம். ஆந்திரத்திலிருந்து கட்சியினரை அழைத்து வர ரூ. 1 கோடியே 12 லட்சத்தை சந்திரபாபு நாயுடு செலவு செய்துள்ளாராம்.