உடல் உறுப்பு தானத்தில் கூட ஊழல் செய்யும் தமிழக அரசு – கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

உடல் உறுப்பு தானத்தில் கூட ஊழல் செய்யும் அரசாக இந்த அரசு உள்ளது. வெளி மாநிலம், வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு விற்று லாபம் அடைய நினைக்கு ஆட்சியளர்கள், இதைவிட கேவலமான ஊழலை நாம் பார்த்திருக்க முடியாது, மறுபடியும் இந்த ஆட்சி வந்தால் தமிழகம் தாங்குமா என்பதனை மக்கள் சிந்தித்து பாரூங்கள், இட ஓதுக்கீட்டை நாசமாக்க முயற்சிக்க இந்த மத்திய, மாநில அரசுகள் ஒழிய வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மு.கோட்டூர், சென்னமரெட்டிபட்டி,வெம்பூர் மற்றும் தாப்பாத்தி ஆகிய கிராமங்களில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான கீதாஜீவன் தலைமை வகித்தார். இதில் திமுக மகளிர் அணி மாநில செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு மக்களின் குறைகளை கோட்டறிந்தார். பொது மக்கள் சாலை வசதி, குடி தண்ணீர் வசதி, பஸ் வசதி , மருத்துவ வசதி இல்லை உள்ளிட்ட அடிப்படை வதிகள் இல்லை என்றும், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை கிடைப்பதில்லை என்று குற்றச்சாட்டு தெரிவித்தனர். மேலும் தங்கள் பகுதிக்கு சுகாதார வளாகம், சமுதாய நலக்கூடங்கள், பள்ளி கட்டிடங்கள் தேவை என்று கோரிக்கை வைத்தனர்.

சென்னமரெட்டிபட்டியில் நடைபெற்ற கூட்டத்தின் போது பேரரசு என்ற சிறுவன் தங்கள் பகுதிக்கு ஆங்கில பள்ளி ஒன்று வேண்டும் என்று கோரிக்கை வைத்தான். நிச்சயமாக சிறுவனின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கனிமொழி எம்.பி. வாக்குறுதி அளித்தார்.

சென்னமரெட்டிபட்டியில் கனிமொழி எம்.பி பேசுகையில் பல கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று இருந்தாலும் , இந்த கூட்டத்தில் ஒரு சிறுவன் கேள்வி கேட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.. அச்சிறுவனுக்கு வாழ்த்துக்கள்.. எதிர்காலம் அவர்கள் கையில் தான் உள்ளது.. கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நிறைவேற்ற வழிவகை செய்யப்படும், இந்தியாவில் எவ்வித வளர்ச்சியம் இல்லை, வீட்டில் பிள்ளைகள் படித்து விட்டு வேலை கிடைக்காத நிலை, மத்தியில் உள்ள அரசு ஜீ.எஸ்.டி வரி கொண்டு வந்துள்ளது. இதில் பல குழப்பங்கள் உள்ளன. ஜீ.எஸ்.டி வரி வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் மக்களுக்கு பயன்படும் வகையில், பாதிப்பு ஏற்படாத வகையில் செய்ய வேண்டும், ஜீ.எஸ்.டி வரியினால் சின்ன, சின்ன தொழில்கள் மூட கூடகூடிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. பணமதிப்பு இழப்பு கொண்டு வந்து எல்லோர் வீட்டில் இருந்த பணத்தினை சுருட்டி கொண்டு போன ஒரு சூழல், ரூபாய் 15லட்சம் தருவதாக கூறிய பிரதமர் மோடி, பணம் மதிப்பு இழப்பு என்ற பெயரில் வீட்டில் இருந்த பணத்தினை செல்லாது என்று சொல்லி காகிதமாக மாற்றிய அவல நிலை நாம் கண்கூடாக பார்த்தோம், இங்குள்ள ஆட்சி எதில் எல்லாம் ஊழல் பண்ண முடியுமோ அதில் ஊழல் செய்து வருகிறது.உடல் உறுப்பு தானத்தில் கூட ஊழல் செய்யும் அரசாக இந்த அரசு உள்ளது. வெளி மாநிலம், வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு விற்று லாபம் அடைய நினைக்கு ஆட்சியளர்கள், இதைவிட கேவலமான ஊழலை நாம் பார்த்திருக்க முடியாது, இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் தமிழகம் உள்ளது என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது, நீங்கள் நினைத்தால், சரியாக வாக்கு அளித்தால் ஆட்சியை இப்போதே மாற்றமுடியும், அந்த பவர் உங்களிடம் உள்ளது,தேர்தலுக்கு உங்களிடம் தரும் பணம் உங்களிடம் சுரண்டப்பட்டபணம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், அதை நம்பி நாம் தவறாக வாக்கு அளித்தால், மறுபடியும் இந்த ஆட்சி வந்தால் தமிழகம் தாங்குமா என்பதனை சிந்தித்து பாரூங்கள் என்றார்.

தொடர்ந்து தாப்பத்தி கிராமத்தில் கனிமொழி எம்.பி. பேசுகையில் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடந்த கூடாது என்ற முடிவு வில் உள்ளனர். விரைவில் ஆட்சி மாற்றம் வரும், அது உங்கள் கையில் தான் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி, இங்கேயும் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடிய சூழ்நிலையை எதிர்நோக்கி உள்ளோம், தமிழக நலனுக்கு எதிராக உள்ள மத்திய அரசுக்கு காவடி தூக்கும் அரசாக தற்போதைய அரசு உள்ளது. தமிழக மக்களுக்கு விரோதமாக எந்த எந்த சட்டங்கள் கொண்டு வந்தாலும், அதற்கு வாய் திறக்கமால் ஆதரவு தெரிவித்து, தன்னுடைய ஆட்சியை நிலைநிறுத்தி கொள்ள வேண்டும் என்று நினைக்கின்ற ஆட்சி இங்கு நடைபெறுகிறது.

இட ஒதுக்கீடு என்பது திராவிட கழகம், அண்ணா, பெரியார், கருணாநிதி கொண்டுவந்த காரணத்தினால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தபட்ட மக்கள் பயன்பெற்றனர். மத்திய அரசு கொண்டு வந்த 10சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிர்த்து ஓட்டுபோடமால், அதிமுக கண்துடைப்புக்காக வெளிநடப்பு செய்தனர்.ஆனால் திமுக வலுவாக எதிர்த்து வாக்களித்தது.10 சதவீத இட ஒதுக்கீடு உயர்சாதி மக்களையும் மத்திய அரசு ஏமாற்றுகிறது. இட ஒதுக்கீடு நாசாமக்க துணிந்துவிட்ட மத்திய அரசு, திராவிட இயக்கம் என்று சொல்வி நம்மை ஏமாற்றி கொண்டு இருக்கும் அதிமுக ஆட்சி இரண்டும் ஒழிய வேண்டும், இங்குள்ள ஆட்சி தூக்கி எறிய படுவேண்டும், மத்தியில் தமிழக நலன் காக்கும், தமிழக குரலை கேட்கும் அரசினை நிறுவி கொண்டுவோம் என்றார்.

தாப்பாத்தியில் கனிமொழி எம்.பி.பேசிகொண்டு இருக்கும் போது தீடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் பேசி முடிக்கும் வரை மின்சாரம் வரவில்லை