இளைய தலைவர்களை ஒன்று சேர்ப்பதில், தீவிரம் -ஸ்டாலினுக்கு வயது, 60 க்கு மேல் – அகிலேஷ் யாதவ்

மோடிக்கு எதிராக அணி திரட்டுவதில், காங்கிரசை விட, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் இருக்கிறார்.
45 வயதாகும் இவர், ஏற்கனவே உத்தர பிரதேச முதல்வராக பணியாற்றி உள்ளார். இவரும், மாயாவதியும் சேர்ந்து, இப்போது மோடிக்கு எதிராக கை கோர்த்துள்ளனர்.நாடு முழுவதும் உள்ள இளைய தலைவர்களை ஒன்று சேர்ப்பதில், தீவிரம் காட்டி வருகிறார்
அகிலேஷ். எதிர்க்கட்சிகளில், 50 வயதுக்கு குறைவான தலைவர்களை ஒரு அணியில் திரட்டுவது, இவரது திட்டம். பா.ஜ., மற்றும் காங்கிரசுக்கு எதிராக அணி திரட்டி, மத்தியில் ஆட்சியை பிடிக்க, இப்போதே முயற்சி செய்து வருகிறார், அகிலேஷ்.தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான, சந்திரசேகர ராவின் மகன், கே.டி.ராமாராவ்; இவருக்கு வயது, 42. இவரையும், தன் அணியில் சேர்க்க முயற்சித்து வருகிறார்,
அகிலேஷ்.அடுத்ததாக, தேவிலாலின் பேரனும், அஜித் சிங்கின் மகனுமான, ஜெயந்த் சவுத்ரியையும், தன்னுடன் இணைக்க ஆசைப்படுகிறார்.தமிழகத்திலிருந்து யாரைச் சேர்ப்பது என, யோசித்தாராம். ‘தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு வயது, 60 க்கு மேல்; எனவே, இளைஞர் என சொல்லி, அவரை இந்த அணியில் சேர்க்க முடியாது’ என மற்ற இளைய தலைவர்கள் சொல்லி விட்டனராம்.
‘அப்படியானால் உதயநிதி ஸ்டாலின் இந்த அணியில் சேர்வாரா?’ என, அகிலேஷுக்கு நெருக்கமானோர் கேட்கின்றனர். ஆனால், காங்கிரசின் பின், தி.மு.க., செல்லும் நிலையில், இப்படி ஒரு முடிவை ஸ்டாலின் எடுப்பாரா என்பது,கேள்விக்குறியே.