இளம்பெண் கொலை மாமியார் கைது

பாளையங்கோட்டையை அடுத்த திருமலைக்கொழுந்துபுரம்- மணக்காட்டைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சுடலை நயினார் (32), மனைவி வெயிலாச்சி (29). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சுடலைக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட ஆத்திரம் அடைந்த சுடலை அவருடைய தம்பி ஆயிரம் (25) மற்றும் தாய் வசந்தா (60) ஆகியோர் சேர்ந்து வெயிலாச்சியை சரமாரியாக அரிவாளால் வெட்டியதில்வெயிலாச்சி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுபற்றி தகவல் அறிந்த பாளை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வெயிலாச்சி உடலை மீட்டு வெளியூருக்கு தப்ப முயன்ற வசந்தாவை கைது செய்தனர்.தப்பி ஓடிய சுடலை நயினார், ஆயிரம் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.