இரு சக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு

நெல்லை மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையம் அருகே வசித்து வரும் ஆபிரகாம் என்பவர், குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார்.

இந்நிலையில், அவரது வீட்டின் முன் நிறுத்தியிருந்த 2 இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள், தீ வைத்து எரித்தனர். இந்த தகவலின் பேரில் செங்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.