இன்றைய விறுவிறு விரைவு செய்திகள்

Suchi Leaks, Srireddy Leaks போய் இப்போது புதிதாக காயத்ரி லீக்ஸ் வந்திருக்கிறது.
#GayatriLeaks #Visvadharshini #GayatriSai #GayatriRao

 

 

 

 

அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற விருதை பெற்றதற்கு தமிழக ஆளுநர் மரியாதைக்குரிய திரு பன்வாரிலால் புரோஹித் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் தமிழக பாஜக தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள்.

 

 

 

 

கஜா புயல் கடலூர் – பாம்பன் இடையே நவம்பர் 15 ம்தேதி முற்பகல் கரையை கடக்கும்.

நாகைக்கு வடகிழக்கே 800 கி.மீ.தூரத்தில் தற்போது மையம் கொண்டுள்ளது.

கடலூர்,நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 14 ம்தேதி மாலை முதல் பலத்த காற்றுடன் மழை – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

இயற்கை விவசாயியும் பாரம்பரிய நெல் ரகங்களைச் சேகரிப்பதில் தீவிரம் காட்டியவருமான நெல்.ஜெயராமன், உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் சந்தித்து உடல்நலம் பற்றி விசாரித்தார்.

 

 

 

 

 

அதிமுக தொண்டன் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால் எதிராளி ஒரு பக்கெட் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும்

அதிமுகவை யாராலும், எவனாலுன் அழிக்க முடியாது; எங்களை யாரும் அதட்டி ஆள முடியாது

– சாத்தூரில் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

அமைச்சராக இருந்த அனந்தகுமார் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

அனந்தகுமார் மறைவைத்தொடர்ந்து கர்நாடகாவில் இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை விடப்படுவதாக அம்மாநில ஆளுநர் அறிவித்துள்ளார். மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் இன்று தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முழு அரசு மரியாதையுடன் அனந்தகுமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சிவகாசியில் உள்ள 1400 பட்டாசு ஆலைகளும் இன்று முதல் காலவரையின்றி மூடப்படும் – பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அறிவிப்பு

அமைச்சராக இருந்த அனந்தகுமார் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

அனந்தகுமார் மறைவைத்தொடர்ந்து கர்நாடகாவில் இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை விடப்படுவதாக அம்மாநில ஆளுநர் அறிவித்துள்ளார். மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் இன்று தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முழு அரசு மரியாதையுடன் அனந்தகுமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

2013 ராணுவ தளவாட கொள்முதல் நடைமுறைப்படி 36 ரஃபேல் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது- ரஃபேல் போர் விமானம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல்.

வரும் வரை பட்டாசு ஆலைகள் மூடப்படும் – தமிழக அரசுக்கு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் கடிதம்.

பட்டாசு ஆலை வேலைநிறுத்தத்திற்கு நாடு முழுவதும் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள் ஆதரவு அளித்துள்ளதாக அறிவிப்பு.

நீதிமன்றம் கூறுவது போல பசுமை பட்டாசு என்ற ஒன்று இல்லை – பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம்.

தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ரமேஷ் நீதிமன்றத்தில் சரண்.

பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

திசை மாறும் கஜா….

நவ.15ஆம் தேதி முற்பகல் கடலூர்-பாம்பன் இடையே கஜா புயல் கரையை கடக்கும்: இந்திய வானிலை மையம்

திருட்டு வீடியோ தொடர்பாக திரைத்துறையினர், டிஜிபி, உள்துறைச் செயலரும் அமர்ந்து பேசி பிரச்னையை தீர்க்க வேண்டும்- திருட்டு வீடியோ விவகாரம் தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கான கிராக்கியை அதிகரித்து, விலையை உயர்த்துவதற்கு வசதியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வளம்மிக்க அரபு நாடுகள் முடிவு செய்து வருகின்றன.

வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்

கல்வி உதவித்தொகையில் ரூ.17 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஆதிதிராவிட நலத்துறை செயலர் பதிலளிக்குமாறு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ராயபுரம் அருகே செல்போன்கடை ஊழியரை வெட்டி ரூ.75 லட்சம் பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நாளை சந்தித்து பேசுகிறார். அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை இந்த சந்திப்பு நடைபெறுகிறது

குட்கா வழக்கில் கைதான அதிகாரிகள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது

33 வழித்தடங்களில் செல்லும் அரசு விரைவு பஸ்களை போக்குவரத்து கழகங்களுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது

தருமபுரி, சேலம் மாவட்டங்களில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்ததற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்

இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு உச்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்க வேண்டும்- விஜயகாந்த் அறிக்கை

கடன் வாங்கி மோசடி செய்தோரின் பட்டியலை பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஐ.டி.பி.ஐ., மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை இணையத்தில் வெளியிட்டு உள்ளன. இந்த நான்கு வங்கிகளில் மட்டும், 1,815 பேர், 42 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்துள்ளனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு, கடந்த செப்டம்பர் நிலவரப்படி, நீரவ் மோடி, சோக்சி, விஜய் மல்லையா உட்பட 1,124 பேர், 23 ஆயிரத்து 470 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளனர். ஐ.டி.பி.ஐ., வங்கிக்கு, 11,050 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். பேங்க் ஆப் பரோடாவுக்கு 6,261 கோடி ரூபாயும், சிண்டிகேட் வங்கிக்கு 1,159 கோடி ரூபாயும் கடன்பாக்கித் தொகை செலுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டிருக்குது

விஜய் ரசிகர்கள் என கூறிக் கொண்டு அரிவாளுடன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட 2 பேர் குறித்த விவரம் தெரிந்தவர்கள் 044 – 23452348, 23452350 ஆகிய எண்களுக்கு தெரிவிக்க வேண்டும் – 🚨சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை

கஜா புயலை எதிர்கொள்வது குறித்து காணொலி மூலம் மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் அலுவலர்களுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை\\

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியாருக்கு சாதி அடையாளம் சூட்டியதாக மு.க.ஸ்டாலின் கண்டனம்

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதி தீ குளிக்க முயற்சி.

கஜா புயல் பாதிப்புகளை குறைக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தண்டனைக்குரியது என உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்

குரூப்-2 வினாத்தாளில் பெரியார் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு வருத்தம் தெரிவித்தது டிஎன்பிஎஸ்சி

கல்வி உதவித்தொகையில் ரூ17.36 கோடிக்கு கையாடல் நடந்தது குறித்து 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என ஆதி திராவிட நலத்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சிபிஐ விவகாரத்தில் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது

அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

சிபிஐ புதிய இயக்குநரான நாகேஸ்வரராவ் முக்கிய முடிவு எடுக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடர்கிறது

டெங்கு, பன்றிக் காய்ச்சல்களை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்த றிக்கையை வரும் 20-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் – சுகாதாரத்துறை முதன்மை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

புதுச்சேரி தலைமை நீதிபதி தனபால் கார் விபத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது விபத்து.

புதுச்சேரி நீதிமன்ற வாசல் அருகே மின் கம்பத்தில் மோதி நீதிபதியின் கார் கவிழ்ந்தது.

காயமின்றி தப்பிய நீதிபதி தனபால் பின்னர் நீதிமன்ற பணியில் ஈடுபட்டார்.

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு எதிரான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் – வழக்கை வெள்ளிக் கிழமைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

*இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து, இலங்கை உச்சநீதிமன்றத்தில் முக்கிய அரசியல் கட்சிகள் மனுத்தாக்கல்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது, ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி மனு.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் திரைப்பட இயக்குநர் பாலா இன்று ஆஜரானார். ‘அவன்-இவன்’ திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை இழிவாக சித்தரித்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜாரானதால், அவருக்கு பிறப்பிக்கப்படிருந்த பிடியாணை ரத்து செய்யப்பட்டது. இதே வழக்கில் நடிகர் ஆர்யா 16-ம் தேதி ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
\

🎯சண்டிகரில் நடைபெற்ற மல்யுத்த போட்டிக்கான தொடக்க விழாவில் நடனம் ஆடச் சென்றிருந்தார் நடிகை ராக்கி சாவந்த். அப்போ ஜஸ்ட் சவாலுக்காக வீராங்கனையுடன் போட்டி போடும் போது , வீராங்கனை ராக்கியை தலைகீழாக தரையில் வீசியதில் அவருக்கு எலும்புமுறிவு ஏற்பட்டு போச்சு