இன்றைய (பிப்.,02) விலை: பெட்ரோல் ரூ.75.82, டீசல் ரூ.67.62

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.82 டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.62 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (பிப்.,02) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.75. 82காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ரூ.67.62 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (பிப்.,02) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.