இன்றைய பஞ்சாங்கம் ~ ராசி பலன்கள்

ஆடி ~ 28

13.08. 2019 செவ்வாய்கிழமை.

வருடம்~ விகாரி வருடம். {விகாரி நாம சம்வத்ஸரம்}

அயனம்~ தக்ஷிணாயணம்.

ருது~ க்ரீஷ்ம ருதௌ.

மாதம்~ ஆடி ( கடக மாஸம்)

பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.

திதி ~ திரயோதசி பிற்பகல் 03.19 PM. வரை. பிறகு சதுர்த்தசி.

ஸ்ரார்த்த திதி ~ திரயோதசி

நாள் ~ செவ்வாய்க்கிழமை {பௌம வாஸரம் } ~~~~

நக்ஷத்திரம்~ உத்திராடம்

யோகம்~சித்த யோகம்

கரணம் ~ தைதுலம், கரஜை.

நல்ல நேரம்~ காலை 07.45 AM ~ 08.45 AM & 04.45 PM ~ 05.45 PM .

ராகு காலம்~ பிற்பகல் 03.00 PM ~ 04.30 PM .

எமகண்டம்~ காலை 09.00 AM ~10.30 AM.

குளிகை ~ 12.00 NOON ~ 01.30 PM.

சூரிய உதயம்~ காலை 06.04 AM.

சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.28 PM.

சந்திராஷ்டமம்~ திருவாதிரை.

சூலம்~ வடக்கு .

பரிகாரம்~ பால்

🚩🔯⚜ராசி பலன்கள்⚜🔯🚩

🔔13/08/2019🔔

🔯மேஷம் ராசி

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். எடுத்த காரியங்களை எண்ணியபடி செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். புதியவற்றை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்வீர்கள். வாகனங்களால் இலாபம் அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்

அசுவினி : பாராட்டப்படுவீர்கள்.
பரணி : வெற்றி காண்பீர்கள்.
கிருத்திகை : இலாபம் அதிகரிக்கும்.

🔯ரிஷபம் ராசி

வாரிசுகளால் பெருமை அடைவீர்கள். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் அமையும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். இளைய உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். ஆன்மீகம் சம்பந்தமான உபதேசங்கள் கிடைக்கும். பயணங்களில் நிதானம் வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

கிருத்திகை : அறிமுகம் கிடைக்கும்.
ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : ஆதரவு கிடைக்கும்.

🔯மிதுனம் ராசி

பிறருக்கு உதவும்போது கவனமாக இருக்கவும். கோபம் கொள்ளாமல் அனைவரிடமும் நிதானமாக நடந்து கொள்ளவும். சுயதொழில் சார்ந்த முயற்சிகளில் சற்று கவனத்துடன் செயல்படவும். கடன் சார்ந்த பிரச்சனைகளில் சில சங்கடங்கள் ஏற்படலாம். கொடுக்கல்-வாங்கல் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிடம் : உதவுதலில் கவனம் வேண்டும்.
திருவாதிரை : நிதானமாக நடக்கவும்.
புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.

🔯கடகம் ராசி

உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளிநாடுகளுக்கான பயணங்களால் நன்மை கிடைக்கும். நண்பர்களால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உயர்கல்வி சம்பந்தமான புதுவிதமான ஆராய்ச்சிகளால் புகழப்படுவீர்கள். சுபச் செயல்களில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : பாராட்டப்படுவீர்கள்.
ஆயில்யம் : முன்னேற்றம் உண்டாகும்.

🔯சிம்மம் ராசி

தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் உடல் சோர்வு உண்டாகும். உடல் உபாதைகள் குறையும். விவாதங்களால் புகழப்படுவீர்கள். நண்பர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். கடன் தொல்லைகள் குறையும். தெளிவற்ற எண்ணங்களால் சஞ்சலம் உண்டாகும். வாகனப் பாராமரிப்பு செலவுகள் நேரிடலாம். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மகம் : சோர்வு உண்டாகும்.
பூரம் : கவலைகள் குறையும்.
உத்திரம் : செலவுகள் நேரிடலாம்.

🔯கன்னி ராசி

புத்திரர்களால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பலனை எதிர்பாராமல் செய்த செயல்களால் இலாபம் உண்டாகும். விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். பணியில் மேன்மைக்கான செயல்களை செய்வீர்கள். பணி சம்பந்தமாக உயர் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : மனக்கசப்புகள் குறையும்.
சித்திரை : மேன்மையான நாள்.

🔯துலாம் ராசி

நீண்ட நாட்களாக செய்ய நினைத்த பணியை புதிய நபர்களின் அறிமுத்தால் செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மதிப்பு உயரும். தொழில் திறமை மூலம் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : காரியசித்தி உண்டாகும்.
சுவாதி : இலாபம் அதிகரிக்கும்.
விசாகம் : மதிப்பு உயரும்.

🔯விருச்சகம் ராசி

எடுத்த காரியத்தில் மேன்மையான நிலையும், திருப்தியும் உண்டாகும். பணி சம்பந்தமான பயணங்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். பூமி விருத்தி செய்வதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். தர்ம ஸ்தாபனங்களில் தலைமை பதவிக்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : மேன்மை கிடைக்கும்.
அனுஷம் : அலைச்சல்கள் ஏற்படும்.
கேட்டை : வாய்ப்புகள் உண்டாகும்.

🔯தனுசு ராசி

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பிறரின் செயல்பாடுகளை விமர்சனம் செய்யாமல் இருக்கவும். புதிய தொழிலை தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும். வெளியூர் பயணங்களில் காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மூலம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூராடம் : முயற்சிகள் மேலோங்கும்.
உத்திராடம் : சாதகமான நாள்.

🔯மகரம் ராசி

கூட்டாளிகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். மனைவிவழி உறவுகளின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளும், பாராட்டுகளும் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை நிறம்

உத்திராடம் : இலாபம் அதிகரிக்கும்.
திருவோணம் : பரிசுகள் கிடைக்கும்.
அவிட்டம் : கவனம் வேண்டும்.

🔯கும்பம் ராசி

எதிர்பாலின மக்களிடம் அனுசரித்து செல்லவும். செய்யும் முயற்சியில் தனலாபம் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் செயல்படவும். திருமண முயற்சிகளில் சுபச் செய்திகள் கிடைக்கும். கூட்டாளிகளுக்கிடையே இருந்த வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சில சங்கடங்கள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன் நிறம்

அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
சதயம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.

🔯மீனம் ராசி

அயல்நாட்டு பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். இணையதளம் சம்பந்தான பணிகளில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். சபைகளில் பொறுப்புகள் உயரும். பொதுத்தொண்டு சம்பந்தமான செயல்பாடுகளால் முன்னேற்றம் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். புத்திரர்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : மேன்மை உண்டாகும்.
உத்திரட்டாதி : பொறுப்புகள் உயரும்.
ரேவதி : முன்னேற்றம் உண்டாகும்.