இன்றைய காலை செய்தி துளிகள்

2004-ல பாலியல் தொந்தரவு குடுத்தவர 2014-ல எதுக்கு கல்யாணத்துக்கு கூப்டனும், அப்படியே பாலியல் தொந்தரவு குடுத்துருந்தா அப்பவே போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுக்காம இப்ப ட்விட்டர்ல ஏன் ட்வீட் போடனும்????

 

 

 

 

 

 

தாமிரபரணி புஷ்கரணி விழாவில் கலந்துகொண்டு தீர்த்தம் நீராடுவதற்க்கு, சாதுக்கள், யோகிகள், பாவத்தை போக்கும் பாபநாசத்தில் குழுமியிருக்கும் காட்சி 👀🙏நமச்சிவாயம் சிவாயநம.🙏

 

144.ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தாமிரபரணி புஷ்கரவிழா வை முன்னிட்டு அருள்தரும் அன்னைகாந்திமதிஅம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமிநெல்லையப்பர் திருக்கோயிலுக்கு சுவாமி-அம்பாள் அபிஷேகத்திற்காக தினந்தோறும் ( இடை இடையே நின்று நின்று தொடரும்????? )தாமிரபரணி நதிக்கரையில் இருந்து யானை,மேளதாளத்துடன் எடுத்து வரும் திருமஞ்சனம் தீர்த்தத்தை 11.10.2018.முதல் 22.10.2018.வரை சிறப்பாக செய்யும் முகமாக திருமஞ்சன தீர்த்தத்தை யானை மீது ஏற்றி கொண்டுவர ஏற்பாடு செய்யும்படி 9.10.2018.அன்று நிர்வாகஅதிகாரியிடம் நேரில் மனு கொடுத்து அவர்களும் ஏற்பாடு செய்வதாக கூறியதின் அடிப்படையில் ஏராளமான பக்தர்கள் திருமுறை பாடி திருமஞ்சன தீர்த்தத்தை அழைத்து வர இன்று 11.10.2018.காலையில் திருப்பணிமுக்கில் நின்றோம்.ஆனால் நிர்வாகம் எவ்விதமான சிறப்பு ஏற்பாடும் நாதஸ்வரம் கூட இல்லாமல் செய்யாத காரணத்தால் ஏமாற்றத்துடன் மனதிற்கு மிகவும் வேதனையுடன் பக்தர்கள் திரும்பி சென்றார்கள். ஆன்மீகப் பணியில் உங்கள்.சிவ.வெங்கிடசுப்பிரமணியன்.Ex.சேர்மன்.

 

கன்னியாகுமரி மாவட்ட அணைகள் நிலவரம்

பேச்சிப்பாறை – 27.40 அடி
( கொள்ளளவு – 48 அடி )
நீர் வரத்து -536 கன அடி,
பாசனத்திற்கு திறப்பு – 654

பெருஞ்சாணி – 69.15 அடி
( கொள்ளளவு -77 அடி ),
நீர் வரத்து – 153 கன அடி,
பாசனத்திற்கு திறப்பு- இல்லை

மாம்பழத்துறையாறு அணை – 53.81 அடி
( கொள்ளளவு – 54.12 ),
நீர் வரத்து -7 கன அடி

பொய்கை அணை -27.10 அடி
(கொள்ளளவு- 42.65)

சிற்றார் – 1 அணை – 15.15 அடி,
( கொள்ளளவு – 18 அடி ),
நீர் வரத்து – 58 கன அடி

சிற்றார் – 2 அணை – 15.25 அடி,
( கொள்ளளவு – 18 அடி )
நீர் வரத்து. – 90 கன அடி

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை அளவு விபரம். ( மில்லி மீட்டரில்)
நாகர்கோவில். 46
மாம்பழத்துறையாறு. 38
புத்தன் அணை 31
பெருஞ்சாணி. 30.2
சுருளோடு 22.4
அடையாமடை 17
சிற்றார் – 1 15.6
பேச்சிப்பாறை. 14

 

மதுராந்தகம் பிரபல பாத்திக்கடையில் இரண்டாவது நாளாக வருமான வரி துறையினர் சோதனை.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இயங்கி வரும் அன்சர் ஸ்டோர் பாத்திரக்கடையில் சுமார் 12 மணி நேரத்திர்க்கு மேல் வருமான வரி துறையினர் 10க்கும் மேற்பட்டோர் சோதனையிட்டு வருகின்றனர்

 

ரபேல் ஒப்பந்தம் – பிரான்ஸ் பத்திரிகையின் தகவலால் மீண்டும் சர்ச்சை

பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனமான மீடியாபார்ட்(Mediapart) எனும் பத்திரிகை டஸ்சால்ட் நிறுவனத்துடன் இந்திய அரசு மேற்கொண்ட ரபேல் ஒப்பந்தம் தொடர்பான முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. அதில், ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் இருக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கட்டாயப்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் டஸ்சால்ட் நிறுவனத்தின் ஆவணங்களிலேயே உள்ளது என மீடியாபார்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. ரபேல் முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே சரமாரியாகக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் நிலையில் பிரான்ஸ் பத்திரிகையின் இந்த தகவல் புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

 

சுனாமி எச்சரிக்கை

பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

பிரிட்டனின் கிம்பே தீவில் இருந்து கிழக்கே 125 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ராட்ச அலைகள் ஏற்பட்டதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சேதங்கள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை

 

இயற்கை பேரழிவுகளால் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ள இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சென்னை பூக்கடை பகுதியில் உள்ள கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைப்பு

 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 879 புள்ளிகள் சரிந்து 33,881இல் வர்த்தகமாகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 276 புள்ளிகள் சரிந்து 10,184இல் வணிகமாகிறது.