இன்று ஸ்டாலின் -யெச்சூரி சந்திப்பு

அடுத்த ஆண்டு, மே மாதம் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ., அணிக்கு எதிராக, மதச்சார்பற்ற கட்சிகளை, தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் முயற்சியில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு உள்ளார்.

சமீபத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், கர்நாடக முதல்வர் குமாரசாமி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து, மெகா கூட்டணி அமைப்பது குறித்து, ஆலோசனை நடத்தி உள்ளார்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி, இன்று சென்னை வருகிறார். இங்கு நடக்கவுள்ள, கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில், அவர் பங்கேற்கிறார்.

மாலையில், அறிவாலயத்தில், ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.லோக்சபா தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து, இருவரும் பேச்சு நடத்த உள்ளனர்