இந்திய ராணுவ வீரர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இந்திய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

4 மாதங்களாக உளவு பார்த்து பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு தகவல் தெரிவித்தது கண்டு பிடிக்கப் பட்டது.  சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பரிமாறி வந்த ராணுவ வீரரை கைது செய்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணுவ வீரர் கைது தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் கோல் சம்பத் கோஷ் தெரிவித்துள்ளார்