இந்தியாவின் அறிவுரையை தட்டி கழித்த இலங்கை

இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்த குறி வைக்கப்பட்டிருப்பதாக பயங்கரவாதிகளின் பெயர்கள், முகவரி, போன் எண்களுடன் இந்திய உளவுத்துறை ஏப்.,11 அன்றே இலங்கைக்கு ஒரு எச்சரிக்கை விடுத்தது தெரிய வந்துள்ளது.

10 நாட்களுக்கு முன்பே இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக 3 பக்க விபரத்துடன் இலங்கை உளவுத்துறைக்கு, இந்திய உளவுத்துறை எச்சரிக்கை அனுப்பி உள்ளது. அதில், தற்கொலைப்படை தாக்குதல்கள் மட்டுமல்ல, குழுக்களாக பிரிந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தவுஹீத் ஜமாத் அமைப்பினர் இதை செய்ய திட்டமிட்டுள்ளனர் என குறிப்பிட்டு, பயங்கரவாதிகள் மறைந்திருக்கும் முகவரி, அவர்களின் தொலைபேசி எண்கள், அவர்களின் பின்னணி உள்ளிட்ட விபரங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இலங்கை நிர்வாகம் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்திய உளவுத்துறை முன்பே எச்சரித்திருந்ததை அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவும் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் இந்தியா எச்சரித்தது தொடர்பாக தனக்கு எந்த தகவலும் சொல்லப்படவில்லை என அதிபர் சிறிசேனா கூறி உள்ளார்.