இந்தியன் 2ல் 2.0 பட வில்லனா…?

கமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளியாகி வசூல் குவித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. ஷங்கர் டைரக்டு செய்கிறார். இதில் கமல்ஹாசன் வயதான தோற்றத்திலும், இளமையாகவும் வருகிறார்.

வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களை வைத்து வயதான தோற்றத்தை உருவாக்கி உள்ளனர். கதாநாயகியாக காஜல் அகர்வால் வருகிறார். இன்னொரு கதாநாயகியாக நடிக்க தென் கொரிய நடிகை பே சூஸியிடம் பேசி வருகின்றனர். இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் இறுதி காட்சி வெளிநாட்டில் முடிவடையும்.

இரண்டாம் பாகம் தைவானில் தொடங்கி இந்தியாவுக்கு வருவது போல் திரைக்கதை அமைத்துள்ளனர். இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் அக்‌ஷய் குமாரிடம் பேசி வருகிறார்கள்.  இவர் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக வந்தார். இந்தியன்-2 படத்தில் நடிப்பது குறித்து இன்னும் அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை