இதே நாளில் நடைப்பெற்ற வரலாற்று நிகழ்வுகள்….!

இதே நாளில் நடைப்பெற்ற வரலாற்று நிகழ்வுகள்….!

?எம்.ஆர்.எஸ்.ராவ்
? இந்திய விஞ்ஞானி எம்.ஆர்.எஸ்.ராவ் 1948ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி மைசூரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் எம்.ரங்கசாமி சத்யநாராயண ராவ் (ஆயnஉhயயொயடடi சுயபெயளறயஅல ளுயவலயயெசயலயயெ சுயழ) ஆகும்.

? இவர் நூற்றுக்கணக்கான சர்வதேச பத்திரிக்கை கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் இவர் குரோமட்டின் உயிரியல் மற்றும் புற்றுநோய் உயிரியல் பற்றிய ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தினார்.

? இவருடைய வெளியீடான பெருங்குடல் புற்றுநோய் பற்றிய விளக்கங்கள் செல் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இவருக்கு இந்திய அரசால் அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் (2010) பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

? மேலும் இவர் பல பதக்கங்கள் மற்றும் விருதுகளை பெற்றுள்ளார். சிறப்பான பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் இவர் தன்னுடைய 70வது வயதை நிறைவு செய்கிறார்.

?பெலிக்ஸ் ஹாஃப்மேன்
? ஆஸ்பிரின் (யுளிசைin) மருந்தைத் தயாரித்தவரான பெலிக்ஸ் ஹாஃப்மேன் 1868ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள லூட்ஸ்விக்ஸ்பெர்க் என்ற ஊரில் பிறந்தார்.

? சிறுவனாக இருந்த சமயத்தில் இவருடைய தந்தை மூட்டு வலியால் அவதிப்பட்டதை பார்த்து, படித்து முடித்ததும் அதற்கான மருந்தை 1897-ல் கண்டுபிடித்தார்.

? முதலில் பவுடராகத் தயாரிக்கப்பட்ட இவரது மருந்து, பின்னர் மாத்திரை வடிவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. குறைந்த செலவில் தயாரிக்கும் முறையும் மேம்படுத்தப்பட்டு, குறைந்த விலையிலும் விற்கப்பட்டது. உலகம் முழுவதும் அதிவேகமாக இது பிரபலமடைந்தது.

? இதுவரை தயாரித்து விற்பனை செய்யப்பட்ட மருந்துகளிலேயே அதிகளவு வெற்றி பெற்றது ஆஸ்பிரின்தான் என்று கூறப்படுகிறது. (இம்மருந்து பொதுவாக சிறிய வலிகளுக்கு எதிரான வலிநீக்கியாக பயன்படுகிறது. மேலும் இரத்தம் கட்டியாவதைத் தடுக்கும் தன்மை கொண்டதால், இது இதயவலிக்கும், புற்றுநோய்க்கும் எதிராக பயன்படுத்தப்படுகிறது)

? அந்த மருந்து நல்ல பலனையும் கொடுத்தது. அதன் வேதியியல் பெயர் அஸிடைல்சாலிசிலிக் (யுஉநவலடளயடiஉலடiஉ) ஆசிட் ஆகும். மருத்துவ மேதை ஃபெலிக்ஸ் ஹாஃப்மேன் 78வது வயதில் (1946) மறைந்தார்.

?முக்கிய நிகழ்வுகள்
? 1924ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி சோவியத்தின் தலைவர் விளாடிமிர் லெனின் மறைந்தார்.
✈ 1945ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ராஷ் பிஹாரி போஸ் மறைந்தார்.
? 1972ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.