இணையதளத்தில் வைரலாக பரவி வரும் 2.0 டீசர்

லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் இது வரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம்,  ‘2.O.’  இதில் ரஜினி ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க 3டி கேமராவைப் பயன்படுத்தி 2.0 படம் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் டீசரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 13ம் தேதி)  வெளியிட இருப்பதாக இயக்குனர் ஷங்கர் அறிவித்திருந்தார்.  அதன்படி, நாடு முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட 3டி வசதி கொண்ட திரையரங்குகளில், 5,000-த்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 2டி வெர்ஷனிலும் டீசர் வெளியிடப்பட்டது தயாரிப்பு நிறுவனமான லைகா யூடியூபிலும் டீசரை  தற்போது வெளியிட்டுள்ளது

ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தின் டீசர் இன்று  காலை 9 மணியளவில் வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது