ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே தமிழக அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து…

தமிழக அரசு பேருந்து திருப்பதி அருகே தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துள்ளானதில் பேருந்தின் ஓட்டுனர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

சேலத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பேருந்து திருப்பதி நோக்கிச் சென்று கொண்டிருந்து. பேருந்தை வெங்கடாசலம் என்பவர் இயக்கினார்.

திருப்பதியை அடுத்த பேரூர் அருகே சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர தடுப்பில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் ஓட்டுனர் வெங்கடாசலம், பேருந்தில் பயணித்த சுந்தரராஜ் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த சில பயணிகள் லேசான காயமடைந்தனர்.