ஆத்ம திருப்தி மன நிறைவுடன் இருக்கிறேன்…விஜய் சேதுபதி (video inside)

ஆரஞ்சு மிட்டாய்’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவான படம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. புதுமுக இயக்குநர் லெனின் பாரதி இயக்கியுள்ள இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்றிருக்கிறது ‘மேற்குத் தொடர்ச்சி மலை’.

இது தொடர்பாகத் தயாரிப்பாளர் விஜய்சேதுபதி வீடியோ ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘இது எளிய மக்களுக்கான படம். ஒரு அழகான வாழ்க்கை மூலமாக, வாழ்வியல் மூலமாக இதன் கதை சொல்லப்பட்டு இருக்கிறது.  இந்த மாதிரி ஒரு படம் தயாரித்ததில் ஆத்ம திருப்தியுடன் இருக்கிறேன். மன நிறைவுடன் இருக்கிறேன். அதற்கு இயக்குநர் லெனினுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

இசைஞானி இளையராஜாவுக்கும் நன்றி. நம்மைப் போன்ற முகங்கள் தான் இதில் நடித்திருக்கிறார்கள். இப்படம் உங்களிடம் நிறைய பேசும் என்று நம்புகிறேன். அது உங்களிடம் சேர வேண்டும். நான் ஒரு நல்ல படம் எடுத்திருக்கிறேன் என நம்புகிறேன். அனைவரும் திரைக்கு வந்து இப்படத்தைப் பார்க்க வேண்டும்’என அவர் தெரிவித்துள்ளார் .