ஆதாரத்தை சமர்ப்பித்தது அரசு… ஸ்டெர்லைட்டை திறக்கபடுமா…?!

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது ஸ்டெர்லைட் ஆலையின் கழிவால் நீர் மாசு அடைந்ததற்கான புகைப்பட ஆதாரத்தை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சமர்ப்பித்தது.

உற்பத்தி, பராமரிப்பு பணி உள்ளிட்ட வேறு எந்த செயல்களையும் செய்யக் கூடாது  , நிர்வாக அலுவல்களுக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசு தொடர்பான அறிவியல் பூர்வ ஆதாரங்களை வரும் ஆக.20க்குள் தாக்கல் செய்ய வேண்டும்  தொடர்ந்து வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதிக்க முடியாது என  தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.