ஆட்சியை மாற்றக்கூடிய தேர்தல் கோவில்பட்டியில் கனிமொழி எம்பி பேச்சு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வக்கீல் தெருவில் உள்ள தனியார் திருமண மண்படத்தில் திமுக வடக்கு மாவட்ட நகர செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான கீதா ஜீவன் தலைமை வகித்தார். திமுக மகளிரணிசெயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில் தமிழகத்தில் 21 தொகுதிகளில் நடைபெறும் இடைதேர்தல் ஆட்சியை மாற்றக் கூடிய தேர்தல் என்பதை புரிந்து கொண்டு நாம் செயல்பட வேண்டும்,

தொகுதியில் யார் போட்டியிடுகிறார்கள் என்பது முக்கியமல்ல, கழகம் வெற்றி பெற எப்படி செயலாற்ற வேண்டும் என்பது தான் முக்கியம் தேர்தலை நாம் எப்படி எதிர் கொள்ள வேண்டும், எப்படி வேலை செய்தால் திமுக வெற்றி பெற முடியும் என்பது குறித்து கருத்துகளை கூறுங்கள் என்று தெரிவித்தார்.