ஆசிரியர்களுக்கான விருது எண்ணிக்கை குறைப்பு

ஆசிரியர்களுக்கான தேசிய விருது எண்ணிக்கை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் 45 விருதுகள் மட்டுமே வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை முடிவு செய்துள்ளது. இதுவரை தமிழகத்துக்கு 23 விருதுகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இனி 3 விருதுகளுக்கு மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்குவதில், புதிய கட்டுப்பாடுகளை, மத்திய அரசு அறிவித்துள்ளது. ‘ஆதார்’ இல்லாவிட்டால் விருது கிடையாது, சி.பி.எஸ்.இ., தவிர, மற்ற தனியார் பள்ளிகளுக்கும் விருது இல்லை என தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *