ஆக 17-ல் ஜோக்கரின் ஓடு ராஜா ஓடு.( trilar inside)

ஜோக்கர் திரைப்படத்தில் நடித்த குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியுள்ள படம்’ ஓடு ராஜா ஓடு’. காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன்,மனைவியின் சந்தோஷமான வாழக்கையில் செட்டாப் பாக்ஸ் எந்த அளவுக்கு பிரச்சையை ஏற்படுத்துகிறது என்றும் அதனால் நாயகனின் வாழக்கை எப்படி மாறுகிறது என்பதை காமெடி கலந்து படமாக்கியுள்ளனர்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாசர், ஆனந்த் சாமி, லக்‌ஷிமி பிரியா, ஆஷிகா சால்வன் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநர் நிஷாந்த் திரைக்கதை எழுதியதோடு, படத்தொகுப்பும் செய்துள்ளார்.

இதற்கு முன்பாகவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திரைப்படத்தை ஆகஸ்டு 17 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.