“அவரது ” சாதனையை முறியடித்த “2.0” பட டீசர் ( teaser inside )

ரஜினி நடித்துள்ள “2.0” படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்

 தென்னிந்திய மொழிகளில் வேகமாக ஒரு கோடி பார்வையாளர்களை பெற்ற முதல் டீசர் என்ற பெருமையை 2.0 படைத்துள்ளது. மேலும் படத்தின் டீசரை சுமார் 4.5 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
இந்தியில் 2.0 டீசரை 1 கோடியே 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். சுமார் 4.5 லட்சம் பேர் டீசரை லைக் செய்துள்ளனர். தெலுங்கில் இந்த டீசரை இதுவரை சுமார் 53 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
மொத்தமாக இதுவரை 2.0 டீசரை 2 கோடியே 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர்.  இது ரஜினியின் முந்தைய படங்களான காலா, கபாலி படங்களின் சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது