அமைச்சர் கைகளை வெட்ட நினைத்தேன் லாலு மகள் ஆவேசம்

மத்திய அமைச்சராக உள்ள ராம் கிர்பால் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவரான லாலு பிரசாத்திற்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவராக இருந்தார். இவர் 2014 ம் ஆண்டு லாலு கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார். புதிதாக கட்சியில் இணைந்த ராம் கிர்பாலுக்கு பாடலிபுத்திரம் தொகுதியில் லாலு மகள் மிசா பாரதியை எதிர்த்து போட்டியிட பா.ஜ., சீட் கொடுத்தது. இதில் வெற்றி பெற்ற ராம் கிர்பாலுக்கு பா.ஜ., மத்திய அமைச்சர் பதவியும் கொடுத்தது.

இது தொடர்பாக பேசிய மிசா பாரதி, ராம்கிர்பால் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தோம். அவர் சுஷில்குமார் மோடியுடன் கை கோர்த்த போதே அவர் மீது இருந்த மரியாதை போய் விட்டது. அந்த சமயத்தில் பா.ஜ.,வுடன் கை கோர்த்த அவரின் கைகளை, அறுவை இயந்திரத்தை கொண்டு வெட்ட நினைத்தேன். மீண்டும் பாடலிபுத்திர தொகுதியில் போட்டியிட உள்ளேன். இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுவேன். 2014 தேர்தலின் போது தயாராவதற்கு போதிய அவகாசம் இல்லாமல் போனது என்றார்.