அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.73.84 ஆக உயர்வு

அமெரிக்க  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 காசுகள் உயர்ந்து ரூ.73.84 ஆக உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ரூ.74.12 ஆக இருந்தது .கடந்த சில நாட்களாக வர்த்தக போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.