அனைத்து கட்சி தலைவர்களுடன் கவர்னர் ஆலோசனை

ஜம்மு காஷ்மீரில், மெகபூபா முப்தி தலைமையிலான அரசுக்கு பா.ஜ., ஆதரவை திரும்ப பெற்றதை தொடர்ந்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் கவர்னர் ஆலோசனை நடத்தினார்.  இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா, மாநில காங்கிரஸ் தலைவர் ஜிஏ மிர், பா.ஜ., தலைவர் சாத் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, கவர்னரை மெகபூபா முப்தி தனியாக சந்தித்து பேசினார்.