அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக பூஜை…

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயருக்கு இன்று சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், பூஜைகள் நடைப்பெற்றது.

மார்கழி மாதம் மூல நட்சத்திரம், அமாவாசை திதியில் ஆஞ்சநேயர் அவதரித்தார். ஆகையால் அந்நாளை மக்களால் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. எனவே ராம பக்தரான ஆஞ்சநேயருக்கு நெல்லையில் அனைத்து ராமர் கோவில்கள், பெருமாள் கோவில்கள் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகளில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, நெல்லை சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் கோவிலில், இன்று ஆஞ்சநேயருக்கு காலை சிறப்பு யாகம் நடைப்பெற்றது. தொடர்ந்த ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், வாசணை திரவியங்கள், சந்தனம், மற்றும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீராபதனை நடைப்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரின் அருள் பெற்று சென்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.