அதிமுக அரசு மீதான ஊழல் புகார் பட்டியலை அன்புமணி இராமதாஸ் ஆளுநரிடம் அளிக்கிறார்.

தமிழ்நாட்டில் அதிமுக அரசு மீதான ஊழல் புகார் பட்டியலை அவற்றுக்குரிய ஆதாரங்களுடன்  தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அவர்களிடம் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையிலான குழு இன்று(09.12.2017) சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு வழங்கவுள்ளது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்கும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஊழல் குற்றச்சாற்றுகள் குறித்து விளக்கவுள்ளார் என தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.