அதிமுகவில் 1 கோடியே 10 லட்சம்  புதிய உறுப்பினர்கள்

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், புதியஉறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் மதுசூதனன், மற்றும் கட்சியின் முக்கிய மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

அதிமுக உறுப்பினர் அட்டையை ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் வெளியிட, அதனை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார்.

பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல சதிகளை தாண்டி அதிமுக வலுவான கட்சியாக இருக்கிறது  மிகவும் குறுகிய காலத்தில் 1 கோடியே 10 லட்சம்  உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.