அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கம் ஏன்…? நீதிமன்றம் கேள்வி

அதிமுக பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் 4 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

பொதுச்செயலாளர் பதவி ரத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பொதுச்செயலாளர் பதவி ரத்தானதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் பொதுச் செயலாளர் என்ற பதவி எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும், உறுப்பினர்களால் மட்டுமே எடுக்க முடியும். பொதுக்குழுவிற்கு, பொதுச்செயலாளர் பற்றிய எந்த முடிவையும் எடுக்க அதிகாரம் கிடையாது.  இதனை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் கே.சி.பழனிசாமி மனு மீது 4 வாரத்தில் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.