அதிபர் பதவியில் இருந்து விலக மறுப்பு : ஜேக்கப் ஜூமா

ஆப்ரிக்க நாடான தென்ஆப்ரிக்க நேஷனல் கட்சி தலைவரான ஜேக்கப் ஜூமா, நாட்டின் அதிபராக உள்ளார். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவரது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது.
இந்நிலையில் தென்ஆப்ரிக்க நேஷனல் கட்சி செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் ஜேக்கப் ஜூமா அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் இல்லையெனில் பாரலி.யில் ஜூமாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கு கட்சி எம்.பி.க்கள் அனைவரும் ஆதரவு அளித்தனர்.
இதனால் ஜேக்கப் ஜூமா தானாக பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், துணை அதிபராக உள்ள ரமாபஹோஸா தற்காலிக அதிபராக பொறுப்பேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஜேக்கப் ஜூமா கூறுகையில், .நான் எந்த தவறும் செய்ய வில்லை. எனக்கு எதிராக சதி நடக்கிறது. எனவே நான் பதவி விலக போவதில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *