அட அவுங்ககிட்ட கேளுங்க… மு.க.அழகிரி ஆவேசம்

கலைஞர் எழுச்சி பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பை மு.க அழகிரி தொடங்க இருப்பதாக அவரது ஆதரவாளர் இசக்கி முத்து தெரிவித்தார். இதற்காக, மாவட்ட வாரியாக ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் இந்த தகவலை மு.க. அழகிரி மறுத்துள்ளார். கருணாநிதி பெயரில் புதிய அமைப்பு தொடங்க நான் ஆலோசனை செய்து வருவதாக இசக்கி முத்து தெரிவித்தது அவரது சொந்த கருத்து என அழகிரி தெரிவித்தார்.

இந்த நிலையில், மு.க அழகிரியிடம் திமுகவில் மீண்டும் சேர்க்க மறுப்பது குறித்து செய்தியாளர்கள் அழகிரியிடம் கேள்வி எழுப்பினர்.  இக்கேள்விக்கு பதிலளித்த மு.க அழகிரி, திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என்று என்னிடம் கேட்காதீர்கள், அவர்களிடம் கேளுங்கள் அவரை கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?  என பதிலளித்துவிட்டு சென்றார்.