அட்சய திருதியை இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறது – கனிமொழி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வக்கீல் தெருவில் உள்ள தனியார் திருமண மண்படத்தில் திமுக வடக்கு மாவட்ட நகர செயலாளர்கள்  கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான கீதா ஜீவன் தலைமை வகித்தார். திமுக மகளிரணி செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பட்டாசு ஆலைக்கு அறிவிக்கப்பட்டுள்ள தடையால் 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழக அரசு, பட்டாசு தொழிலாளர்களின் பிரச்சினையை எடுத்துச் சென்று மத்திய அரசுக்கு எடுத்துச் சென்று, நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை,இது கண்டிக்கத்தக்கது,

பட்டாசு தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இதனை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை, விரைவில் ஆட்சி மாற்றம் வரும், அப்போது நியாயம் கிடைக்க கூடிய சூழ்நிலை, உருவாகும் என உறுதியாக நம்புகிறேன்,

மேற்குவங்கத்தில் கூடிய கூட்டம்.,குறித்த கேள்விக்கு பிரதமர் மோடி அடிக்கடி சொல்லக் கூடிய அட்சய திருதியை நல்ல நாள் இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது.  தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சேர்ந்த ஒருவர் வேட்பாளராக நிற்பார் என்று தெரிவித்தார்.