அடடே அப்படியா…!?

தனியே தன்னந்தனியே

               காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கடமங்கலம் பகுதி ரவுடிகளை பிடிக்க “நர்மதா நந்த குமார்” என்ற சமூக போராளி தன்னந்தனியாக கையில் கம்பு , மிளகாய் பொடி சகிதம் களத்தில் இறங்கி குரு பிரசாத் என்ற ரவுடியை பிடிக்க முயற்சி செய்துள்ளார் ரவுடிகளை கண்டு அச்சப்படும் காவலர்களுக்கு இவர் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த ரிஸ்க் எடுத்துள்ளதாகவும் கூறப்படுவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஆணையத்தை அலற விட்ட பாஜக

     தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் இன்று டெல்லியில் கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்தார். அவர் பேட்டி அளித்து கொண்டு இருக்கும் போதே தேர்தல் ஆணையர் தேதியை அறிவிக்கும் முன்னரே ஊடகங்களில் தேர்தல் தேதி மே 12 என தகவல் வெளியானது. இது எல்லோருக்கும் திர்ச்சியை ஏற்படுத்தியது தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பே கர்நாடக தேர்தல் தேதியை டுவீட் செய்து இருந்தார் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா தேர்தல் அறிவிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன் இவர் தேர்தல் தேதியை அறிவித்து உள்ளார்.

99,500 பணியிடங்களுக்கு 2 கோடி பேர் விண்ணப்பம்

           இந்திய ரயில்வேத்துறையில் காலியாக உள்ள 99,500 பணியிடங்களுக்கு 2 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். ரயில்வேயில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியது. இதற்கு சுமார் 2 கோடி பேர் விண்ணப்பம் செய்துள்ளதால் அதிகாரிகள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.