அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்த மக்கள்

ஆடி, தை மாதங்களில் வரும் அமாவாசை அன்று முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் நன்மைகள் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதன் காரணமாக  ஆடி அமாவாசையான இன்று ராமேசுவரத்தில் திரளான பக்தர்கள் குவிந்தது அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். கடலில் நீராடிய பக்தர்கள் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடினர்.

இதேபோல் பிரசித்தி பெற்ற விருதுநகர்-மதுரை மாவட்ட எல்லையில் உள்ள சதுரகிரி மலை சுந்தர மகாலிங்கசுவாமி கோவிலிலும் நெல்லை மாவட்டம் சொரி முத்து அய்யனார் கோவிலிலும் ஏரல் சேர்மன் சுவாமி கோவிலும் ஆடி அமாவாசையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.   பக்தர்கள் வருகையையொட்டி போலீசார் மற்றும் வனத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் தாமிரபரணி நதிக்கரையிலும் திரளானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் செய்து தங்கள் கடமையை நிறை வேற்றினர்